காவிரி பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியச் செய்திட வேண்டும்

பவானி குமாரபாளையம் காவிரி பழைய பாலத்தில் மின் விளக்குகள் எரியச் செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-08-17 17:00 GMT

 பவானி குமாரபாளையம் காவிரி பழைய பாலத்தில் மின்விளக்குகள் எரியச் செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

பவானியில் இருந்து குமாரபாளையம் நகருக்கும், குமாரபாளையத்தில் இருந்து பவானிக்கும் பொதுமக்கள் சென்று வர அதிகம் பயன்படுத்துவது காவிரி பழைய பாலம்.

வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த பாலத்தில் மின் விளக்குகள் ஒன்று கூட எரியாததால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். செயின் பறிப்பு, பணம் மற்றும் செல் போன் பறிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இதனை தவிர்க்க இங்குள்ள மின் விளக்குகளை எரியச் செய்திட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News