பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை உள்ளதால், அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை
சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை உள்ளதால், அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே காவிரி படித்துறை உள்ளது. இங்கு குப்பைகள், மண் ஆகியவை மலை போல் கொட்டி வைத்திருப்பதால், காவிரி ஆற்றுக்கு குளிக்க, துணி துவைக்க யாரும் கீழே இறங்க முடியாத நிலை உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இரும்பு, பிளாஸ்டிக் சேகரிக்கும் நபர்களால், அவ்வப்போது, தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு, அருகே இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம், ஆர்.ஐ. மற்றும் வி.ஏ.ஓ, அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த படித்துறையில் குப்பைகள் கொட்டாதவாறும், படிகளை தூய்மை படுத்தி, பொதுமக்கள் எளிதாக காவிரி ஆற்றுக்கு சென்று, குளிக்க, துணிகள் துவைக்க எதுவாக, நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை உள்ளதால், அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.