கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது
குமாரபாளையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்தனர்
குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் நாகராஜன்( 56.) குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் 30 வருடங்களாக மருந்து கடை வைத்துள்ளார். நேற்று காலை 11:30 மணியளவில் இவரது கடைக்கு வந்த , பெராந்தர்காடு பகுதியை சேர்ந்த சர்க்கரை கார்த்தி(37) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, நாகராஜன் பாக்கெட்டில் இருந்த ஆயிரத்து 250 ரூபாயை பறித்துக்கொண்டு ஓட முயற்சிக்கும் போது, அருகிலிருந்தவர்கள் அந்த நபரைப் பிடிக்க முயற்சித்தனர். அனைவரையும் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு ஓடி விட்டான். இது குறித்து நாகராஜன் அளித்த புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி (எ) சர்க்கரை கார்த்தியை கைது செய்தனர்.