கருணாநிதி பிறந்தநாள் விழா: பள்ளிப்பாளையம் திமுகவினர் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி, பள்ளிப்பாளையம் திமுகவினர் அசைவ உணவு வழங்கி கொண்டாடினர்.

Update: 2021-06-03 12:10 GMT

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் 98-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இன்று திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், நகர திமுக சார்பில் கொடி ஏற்றி கருணாநிதியின் உருவப்படத்திற்கு,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2,000 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிப்பாளையம் திமுக நகர, ஒன்றிய, நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News