குமாரபாளையத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம்

குமாரபாளையத்தில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-06-03 12:07 GMT

குமாரபாளையத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அன்னதானம் வழங்கினார்.

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

திமுக தலைவராகவும், தமிழக முதல் அமைச்சராகவும் இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி மறைவிற்கு பின்னர் அவரது மகன் மு க ஸ்டாலின் திமுக தலைவரானார். தற்போது அவர் திமுக தலைவராகவும், தமிழக முதல் அமைச்சராகவும் உள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்தது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ந்தேதி கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடங்கி இன்றுடன் நிறைவு  பெறுகிறது. அந்த வகையில் கருணாநிதியின்  101வது பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் வடக்கு மற்றும் தெற்கு நகர தி.மு.க சார்பில், கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு, தெற்கு நகர பொறுப்பாளர்கள் விஜய்கண்ணன், ஞானசேகரன் தலைமையில்இன்று  நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்று, கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரா செந்தில் பங்கேற்று, 101 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கியதுடன், ஆனங்கூர் பிரிவு சாலையில் அமைக்கப்பட்ட மேடை முன்பு ஆயிரத்து 100 நபர்களுக்கும், பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News