குமாரபாளையத்தில் கருமாரியம்மன் பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் கருமாரியம்மன் பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-04-09 14:30 GMT

காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறும், வேண்டுதல்கள் நிறைவேற்ற அக்னி சட்டிகளை கைகளில் ஏந்தியவாறும், அம்மன் வேடமணிந்தவாறும் ஊர்வலமாக வந்தனர்.

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் கருமாரியம்மன் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள,தாளங்கள் முழங்க, பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறும், வேண்டுதல்கள் நிறைவேற்ற அக்னி சட்டிகளை கைகளில் ஏந்தியவாறும், அம்மன் வேடமணிந்தவாறும் ஊர்வலமாக வந்தனர்.

மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கருமாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். பொங்கல் வைத்து வழிபடுதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

சேலம் சாலை சரவணா தியேட்டர் அருகே அங்காள ஈஸ்வரி கல்யாண் ஸ்டோர் அருகில் அமைக்கப்பட்ட விழா பந்தலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர். 

Tags:    

Similar News