கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி, குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Update: 2021-11-30 15:15 GMT

கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் அனுமன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News