கராத்தே போட்டியில் மாணவ, மாணவியர் சாதனை

குமாரபாளையத்தில் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் கராத்தே போட்டி நடைபெற்றது.;

Update: 2022-08-09 15:45 GMT

கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற கராத்தே கட்டா பிரிவு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் 

குமாரபாளையம் நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டா பிரிவு போட்டி நடைபெற்றது. பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பி.டி.ஏ. தலைவர் ஒபுளிராஜா, டாக்டர் சண்முகசுந்தரம் கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கினர். பயிற்சியாளர்கள் நவீன் விஜய், மாதேஷ், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News