பள்ளிபாளையம் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு, பள்ளிபாளையம் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2021-07-17 04:00 GMT

ஆடி மாத திருவிழாக்கள்,  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பள்ளிபாளையம் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் முகப்பு பகுதி அலங்காரம்  எளிமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில். ஆடி மாதம் ஒன்றாம் தேதி விசேஷ பூஜைகளுடன் பூச்சாட்டுதல் துவங்கி 17 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆடி மாதம் 18, 19 தேதிகளில் கோவில் திருவிழா நடைபெறும். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், விழாக்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப எளிமையாக நடைபெறுகின்றன. ஆடி முதல் நாளான இன்று, ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வழக்கமாக நடைபெறும் ஆடி மாத கோவில் திருவிழா,  இந்த வருடம் நடைபெறாது என கோவில் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News