கஞ்சா விற்ற மூவர் கைது
குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.;
கஞ்சா விற்ற
மூவர் கைது
குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 11:15 மணியளவில் நகராட்சி அருகே காவிரி படித்துறை, காந்தி தெரு, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றுகொண்டிருந்த நபரை பிடித்து, விசாரணை செய்ததில், தம்மண்ணன் வீதி, உடையார்பேட்டை, மேற்கு காலனி பகுதிகளை சேர்ந்த ஐயப்பன், 38, சிவா, 23, வசந்தகுமார், 23 என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 1,500:00 ரூபாய் மதிப்புள்ள தலா 50 கிராம் எடையுள்ள, ஐந்து பாக்கெட்டுகள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.