குமாரபாளையம் அருகே அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அருகே அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-07-16 02:17 GMT

குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. பி.டி.ஏ. தலைவர் காந்தி நாச்சிமுத்து, தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தனர்.

வழக்கறிஞர் தங்கவேலு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொழிலதிபர் நாகராஜ் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளையும் நோட்டுப் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். மாணவ மாணவிகள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி உரை நிகழ்த்தினர். இவ்விழாவில் சென்ற கல்வியாண்டில் முதலிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், பேச்சு, கட்டுரை, ஓவியம்,

கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் குமார், மாதேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையிலும், அரசு உதவி பேர் நேரு நினைவு சம்பூரணிஅம்மாள் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News