குமாரபாளையத்தில் கமல் பிறந்த நாள் விழா: அன்னதானம், உறுப்பினர் சேர்க்கை
குமாரபாளையத்தில் கமலஹாசன் பிறந்தநாளையொட்டி அன்னதானம், உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் பிறந்தநாளையொட்டி பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நகரில் 33 வார்டுகளில் கட்சி கொடியேற்றப்பட்டது. நகர செயலர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் காமராஜ் கட்சியின் கொடியேற்றி வைத்தார்.
அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு கமல் வேண்டுகோள் படி கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னப்பநாயக்கன் பாளையம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகிய நான்கு இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து ஆகியன வழங்கப்பட்டன.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலர்கள் சிவகுமார், வேணுகோபால், நகர மகளிரணி செயலர் சித்ரா, 22வது வார்டு செயலர் ரேவதி, 12 வது வார்டு நிர்வாகி உஷா, வட்ட செயலர்கள் யோகராஜ், விஜயகுமார், சரவணன், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.