கமல் பிறந்த நாள் விழாவில் மரக்கன்றுகள் வழங்கல்!

குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று மரக்கன்றுகள் வழங்கினார்.;

Update: 2024-11-03 10:45 GMT

குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பங்கேற்று மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

கமல் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று மரக்கன்றுகள் வழங்கினார்.

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு இவ்விழா ஜே.கே.கே. ரோட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா தலைமையில் நடந்தது. கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்கள், எஸ்,.ஐ. நடராஜ் பங்கேற்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். பள்ளிபாளையம் ஒன்றியம் மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா, தட்டாங்குட்டை பஞ்சாயத்து ஒன்றிய அமைப்பாளர் சொர்ணாம்பாள், வார்டு செயலாளர்கள் வரதராஜ், பாபு, ஒன்றிய செயலாளர் அன்பழகன்,

தங்கராஜ், ராம்கி, தேன்மொழி, கற்பகம், லட்சுமி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News