குமாரபாளையத்தில் உயிரிழந்த கட்சி நிர்வாகி குடும்பத்தினருக்கு கமல் அறுதல்
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு கமல் தொலைபேசியில் அறுதல் கூறினார்.;
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சரவணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது விருப்பப்படி அவரின் குடும்பத்தினர் கண் தானம் வழங்க முன்வந்ததால், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேரில் வந்து கண் தானம் பெற்றனர்.
மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட கலைக்குழு நிர்வாகியும், அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு, நீயா? நானா? நிகழ்ச்சி சாதனையாளரும், கமல் நடிக்கும் விக்ரம் 2 பட நடிகருமான கதிர் கமல், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் நேரில் வந்து ஆறுதல் கூறி நிதி உதவி செய்தனர்.
கட்சியின் நிறுவனர் கமலஹாசன் நேற்று மாலை 05:00 மணியளவில், சரவணன் மனைவி சுஜாதாவிடம் போனில் ஆறுதல் கூறினார்.
அப்போது, சரவணன் ஓய்வறியா உழைப்பாளி. கட்சியின் வளர்சிக்கு மிகவும் உதவியவர். அவரது மறைவுக்கு பினும் கண் தானம் வழங்கியவர் என அறிந்து மனம் நெகிழ்ந்து போனேன். தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எங்களால் ஆன உதவியை செய்ய தயாராக உள்ளோம். மனம் தளராமல் தைரியமாக இருங்கள் என கமல் தெரிவித்தார்.
அப்போது மகளிரணி நகர செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, ஜேம்ஸ், கார்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.