கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2021-08-26 16:00 GMT

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், மேடைப்பேச்சாளர் பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன்கொண்ட தமிழ்தென்றல் கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள், முககவசங்கள், கிரிமிநாசினி மருந்து ஆகியவற்றை அமைப்பாளர் பிரகாஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மணி கிருஷ்ணன், உதவிக்கரம் அங்கப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News