குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழா ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து சமூகத்தினருக்கும் சொந்தமான காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசி மாதம் நடத்தவிருக்கும் மாசித்திருவிழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் விழாக்குழு தலைவர் ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் பங்கேற்றார்.
மார்ச். 1ல் மறு பூச்சாட்டு, மார்ச். 2ல் கொடியேற்றம், மார்ச். 8ல் சக்தி அழைப்பு, மார்ச். 9ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா ஆகிய திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடத்தவும், கொரோனா விதிமுறைகள் பின்பற்றி விழா நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. வண்டி வேடிக்கை நடத்த ஓரிரு நாட்களில் தேதி முடிவு செய்யப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழாக்குழு துணை தலைவர் நடராஜ பெருமாள், விழாக்குழுவினர் ஐயப்பன் பெருமாள், அறிவழகன், புவனேஸ்வரி, தங்கராஜ், பூசாரிகள் சண்முகம், சதாசிவம், உள்பட பலர் பங்கேற்றனர்.