அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் விழா..!
குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.;
அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் விழா
குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ், தலைமையாசிரியை லோகசுந்தரி தலைமையில் நடந்தது. கக்கன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கக்கன் வரலாற்றை மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் ஆசிரியை கலைச்செல்வி எடுத்துரைத்தார். பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சுரேஷ், சரவணன், சோபனா, நிர்வாகிகள் தீனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பி. கக்கன்]விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத்தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.
கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார் காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.
மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது, அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர்.
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன. ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மதராசு மாகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ல் வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.
கக்கன், மேலூர் (தெற்கு) தொகுதியில், 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23 ஆம் நாள் இறந்தார்.