குமாரபாளையத்தில் நடைபெற்ற கபடி தொடர்: செவன் மேன் ஆர்மி அணிக்கு கோப்பை
குமாரபாளையம் முன்னாள் சேர்மன் சேகர் பிறந்தநாள் கபடி போட்டியில், சேலம் செவன் மேன் ஆர்மி அணி, முதல் பரிசை வென்றது
குமாரபாளையம், அன்னை தெரசா கபடி குழுவினர் சார்பில், முன்னாள் சேர்மன் சேகர் பிறந்தநாளையொட்டி, மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாட்களாக கதிரவன் சேகர் தலைமையில், குமார்பாளையத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.
நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் பல மாவட்டங்களை சேர்ந்த, 110 அணிகள் கலந்து கொண்டன. போட்டி முடிவில், முதல் பரிசை சேலம் செவன் மேன் ஆர்மி அணியினரும், இரண்டாம் பரிசை ஜி.எல். ஸ்போர்ட்ஸ் கிளப், ஈரோடு அணியினரும், மூன்றாம் பரிசை ஆட்டையாம்பட்டி இளம் கன்று பைரவ் ஜி அணியினரும், நான்காம் பரிசை குமாரபாளையம் அன்னை தெரசா அணியினரும் வென்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு, கதிரவன் சேகர் கோப்பை, பரிசுகளை வழங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் மாணிக்கம், இளவரசு, ஜகன்நாதன், அன்பழகன், அன்பரசு, ராஜ்குமார், ரவி, மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.