மாரத்தான் போட்டியில் காவலன் செயலி அறிமுகம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த்
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடந்த மராத்தான் போட்டியில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காவலன் செயலியை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடைபெற்ற
மாரத்தான் போட்டியில் காவலன் செயலி அறிமுகம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த்
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடந்த மராத்தான் போட்டியில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காவலன் செயலியை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
.குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடந்த மராத்தான் போட்டியில், போலீசார் சார்பில் காவலன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் பங்கேற்று, காவலன் செயலி குறித்து அறிமுகப்படுத்தி விழிப்புனர்வு ஏற்படுத்தினார்.
இவர் பேசியதாவது:
காவலன் செயலி, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாகும். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தனிமையில் செல்லும் போது, வம்பு செய்யும் நபர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தங்கள் வாகனம் திடீரென்று பழுதாகி நின்றாலும், இதனை பயன்படுத்தினால், தக்க உதவி கிடைக்கும். திடீரென்று மருத்துவ உதவி வேண்டும் என்றாலும் இந்த செயலி மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்க முடியும். இதனை ஒவ்வொருவரும் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அனுப்பி பதிவிறக்கம் செய்து கொள்ள வையுங்கள். போலீஸ் என்றும் உங்கள் துணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் ரவீந்திரன், சத்யா, உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி மற்றும் போலீசார் சார்பில் காவலன் செயலியை திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.