குமாரபாளையத்தில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஆலோசனை குழு தலைவர் குமாரசாமி பேசினார்.
குமாரபாளையத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன், தமிழக நிருபர்கள் சங்கம் சார்பில் செய்தி சேகரிக்கும் மக்கள் நலப்பணியாளர்களான பத்திரிகையாளர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில பொது செயலர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஆலோசனை குழு தலைவர் குமாரசாமி பேசுகையில், பத்திரிக்கையாளர்கள் கடின உழைப்பால்தான் பல அரசியல்வாதிகள், சாமியார்கள், பல தொழிலதிபர்களின் ரகசியங்கள், மோசடிகள், வெளிச்சத்துக்கு வருகின்றன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தகவல் உறுதி படுத்தபட்ட பின்தான் அதிகாரிகள் ரைடுக்கு செல்கிறார்கள்.
அதிகாரிகள் ரைடு செய்வதை பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்து வெளியிடுகிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் பேசினார்.
இதில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், மக்கள் நீதி மய்யம் நகர செயலர்கள் சரவணன், சித்ரா, தே.மு.தி.க. நகர செயலர் ராஜு, மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.