ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடைபெற்ற மாரத்தான்
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற பைபாஸ் மாரத்தான் ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர் தூர அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்.;
ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடைபெற்ற
மாரத்தான்
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற பைபாஸ் மாரத்தான் ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர் தூர அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்.
குமாரபாளையத்தில் உள்ள ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் பைபாஸ் மாரத்தான் என்ற தலைப்பில் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமை வகித்தனர். இது மாரத்தான் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார் போட்டியானது குளத்துக்காடு பகுதியில் இருந்து குமாரபாளையம் நகராட்சி வரை சென்று வரும் 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஒரு பிரிவாகவும், குளத்துக்காடு பகுதியில் இருந்து குமாரபாளையம் நகரம் காவல் நிலையம் வழியாக சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதி வழியாக 10 கிலோமீட்டர் கொண்ட ஒரு பிரிவாகவும் இது பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் இதில் வெற்றி பெற்ற வீரர்கள் ஐந்து முதல் 10 வயது கொண்ட ஒரு பிரிவு, 10 வயது முதல் 50 வயது வரை கொண்ட ஒரு பிரிவு, 50 வயது முதல் 75 வயது வரை கொண்ட ஒரு பிரிவு என மூன்று பிரிவுகளாக ஆண், பெண் மாரத்தான் வீரர்களுக்கு பரிசுகளை நடிகர் ஸ்ரீகாந்த் வழங்கினார். இந்த மாரத்தான் போட்டியில் 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் சதீஷ்குமார், பெண்கள் பிரிவில் திவ்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 10 கிலோமீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் தனுஜ் தாகூர், பெண்கள் பிரிவில் ஷிவானி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடைபெற்ற பைபாஸ் மாரத்தான் போட்டியை நடிகர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.