குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தி : டி.ஆர்.ஒ.துவக்கி வைப்பு
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தியை டி.ஆர்.ஒ. மணிமேகலை துவக்கி வைத்தார்.;
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தியை டி.ஆர்.ஒ. மணிமேகலை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதில் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெற்று அதற்கான தீர்வு காணப்படும். நேற்று ஜமாபந்தி துவக்க விழா நடந்தது. தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
இதில் புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்று, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். நேற்று ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். இன்று கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்கராயன்பேட்டை, படைவீடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.