ஐ.டி.ஐ. நிறுவன 80 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பெங்களூர் ஐ.டி.ஐ. நிறுவன 80 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி குமாரபாளையம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனமான பெங்களூர் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன 80 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி குமாரபாளையம் ஏ.ஐ.சி.சி.டி.யூ, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற இதில் நிர்வாகிகள் சுப்ரமணி, பொன் கதிரவன், பாலுசாமி, ஆறுமுகம், பாலசுப்ரமணி, நஞ்சப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.