குமாரபாளையத்தில் வருமான வரி குறித்த பயிலரங்கம்: ஆர்வமுடன் பங்கேற்பு
குமாரபாளையத்தில் வருமான வரி டி.டி.எஸ் பிடித்தம் தொடர்பான இலவச பயிரலங்கம் நடைபெற்றது.;
ஈரோடு, நாமக்கல் மாவட்ட வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பில், குமாரபாளையத்தில் வருமான வரி டி.டி.எஸ். சம்பந்தமான இலவச பயிரலங்கம், சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வங்கி வரி , அரசு ஒப்பந்தப்பணி வரி, ஜவுளி வியாபாரம், விசைத்தறி வியாபாரம், மளிகை, ஸ்டேஷனரி, ஓட்டல், உள்ளிட்ட வணிகர்கள் டி.டி.எஸ். வரி பிடித்தம், சம்பளதாரர் வரி பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு வகை டி.டி.எஸ். வரிப்பிடித்தம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் வணிகர்கள், ஆடிட்டர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று பயன்பெற்றனர். சிறப்பு அழைப்பாளராக சேலம் வணிக வரித்துறை டி.டி.எஸ். அலுவலர் வேணுகோபால் ரெட்டி பங்கேற்று, பல ஆலோசனைகள் கூறி, வாழ்த்தி பேசினார். இதில், ஆய்வாளர் ரவிச்சந்திரன், சங்க உப தலைவர் செந்தில்குமார், இணைச் செயலர் பாபு, ஆடிட்டர்கள் சுரேஷ்குமார், ராஜசேகரன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள், வணிகர்கள், கணக்காளர்கள் உள்பட பலர் ஆர்வமுடன் பங்கேற்று பலனடைந்தனர்.