குமாரபாளையம் மில் தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

குமாரபாளையம் தனியார் மில் தொழிலாளி வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-10-23 14:39 GMT

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் தனியார் மில் தொழிலாளி வீட்டில் பிடித்த தீயை அணைக்கும் தீயணைப்பு படைவீரர்கள்.

குமாரபாளையம் தனியார் மில் தொழிலாளி வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது39,). தனியார் மில் தொழிலாளி. நேற்று மாலை 06:30 மணியளவில் இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த இவரது மனைவி மலர்கொடி,( 36,) மகள் பானுமித்ரா, மகன் மனோஜ்குமார் ஆகியோர் வெளியில் தப்பி வந்தனர். பூஜை நாள் என்பதால், பானுமித்ரா வீட்டில் சுவாமி படங்களுக்கு முன் தீபம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். முன்னதாக அவ்வழியே வந்த நகராட்சி கவுன்சிலர் ராஜ், தீ விபத்து ஏற்பட்டது கண்டு, அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கம்  உள்ளவர்களை ஒன்று திரட்டி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது. குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மில் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News