குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹால் டிக்கட் வழங்கல்

குமாரபாளையம் அரசு பள்ளியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து ஹால் டிக்கட் வழங்கப்பட்டது.

Update: 2022-05-01 02:01 GMT

குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து ஹால் டிக்கட் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து ஹால் டிக்கட் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் பி.டி.ஏ. ஆலோசனை கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 12 மாணவியர் உள்ளிட்ட 49 மாணவ, மாணவியர்களுக்கு ஹால் டிக்கட்களை பி.டி.ஏ நிர்வாகிகள் ஆசீர்வாதம் செய்து வழங்கினர்.

தலைமை ஆசிரியர் மோகன் பேசியதாவது:- ஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்துவது 10ம் வகுப்பு தேர்வுகள். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிர்வாகிகள் வாசுதேவன், தண்டபாணி, மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

Tags:    

Similar News