ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகம்
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகப்படுத்தபட்டது.;
ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகம்
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகப்படுத்தபட்டது.
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வாகனம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தபட்டது. தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமை வகித்தனர். வாகன தயாரிப்பு நிறுவனமான யாளி மொபைலிட்டியின் நிர்வாகி சிவம் சக்திவேல் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
ஓம் சரவணா பேசியதாவது:
வீல் சேரில் வரும் மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவி இல்லாமல், இந்த வாகனத்தில் ஏறவும், இறங்கவும் முடியும். டூவீலர் ஓட்டுவது போல் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் டூவீலர்களில் செல்வது போல், இவர்களும் எளிதாக இந்த நவீன வாகனத்தில் செல்லலாம். இது இவர்களுக்கு மேலும் புதிய உத்வேகத்தை கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றுத்திறனாளியான மாணவி ஒருவர் இந்த வாகனத்தை ஓட்டி காட்டினார். மாணவ, மாணவியர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.