சர்வதேச மகளிர் தின விழா
குமாரபாளையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
சர்வதேச மகளிர்
தின விழா
குமாரபாளையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சமுதாய நல பயிற்றுனர் மகாலட்சுமி தலைமை வகித்தார். தனியார் கல்லூரி இயற்கை மருத்துவ யோகா மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ்வரி பங்கேற்று, ஆரோக்கிய வாழ்வை குறித்தும், மருத்துவர் தீபிகா பெண்களுக்கு எளிய முறையில் யோகா பயிற்சி செய்வது குறித்தும், விளக்கி கூறினர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க இயக்குனர் செல்வராசு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மாவட்ட இணை திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மகளிர் குழுவிற்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சமுதாய அமைப்பாளர் முரளிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடந்தது. இதில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதி நகராட்சி மற்றும் பேரூராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா தொகுத்து வழங்கினார் ஒருங்கிணைப்பாளர் ரகு நன்றி கூறினார்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.