குமாரபாளையத்தில் சர்வதேச மனித உரிமைக் கழக அலுவலகம் திறப்பு

குமாரபாளையத்தில் சர்வதேச மனித உரிமைக் கழக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.;

Update: 2021-10-17 15:15 GMT

குமாரபாளையத்தில் சர்வதேச மனித உரிமை கழகத்தினர் அன்னதானம் வழங்கினர்.

குமாரபாளையத்தில் சர்வதேச மனித உரிமை கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தேசிய துணை இயக்குநர் அசோக்குமார் தலைமை வகித்தார். வக்கீல் ராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா 6வது முறையாக, சர்வதேச மனித உரிமை கழகத்தை உறுப்பினராகத் தேர்வு செய்து உலக நாட்டுத் தலைவர்கள் வாக்களித்து இந்தியாவைப் பெருமையடையச் செய்துள்ளார்கள்.

சர்வதேச மனித உரிமை ஆணையத்திற்கு அங்கீகாரம் அளித்ததை இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்த உள்ளோம். இதனை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாட உள்ளோம் என்றார்.

அலுவலக திறப்பு விழா மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையத்திற்கு அங்கீகாரம் அளித்ததையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், கோபிராவ், நந்து, கணேஷ்,மோகன், முனீஸ்வரன் உள்படப் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News