குமாரபாளையம்; அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார்குழு கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2024-10-06 09:45 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார் குழு கூட்டத்தில் முதல்வர் ரேணுகா பேசினார். 

அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார் குழு கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார் குழு கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவியர்களுக்கு உள்ளக புகார் குழு கூட்டம், கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. புகார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி பங்கேற்று, மாணவிகளிடம் பாலியல் தொடர்பான புகார், மற்றும் இதர புகார்கள் பற்றி கேட்டறிந்தார். மாணவியர் தங்கள் கருத்துக்களை கூறினர். முதல்வர் ரேணுகா பேசியதாவது:

புகார் குறித்து மாணவியர் பெயர்கள் வெளி வராதபடி, ரகசியம் பாதுகாக்கப்படும். மாணவியர் தங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம். புகார்கள் குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணவியர் நலன் குறித்து தனி கவனம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் புகார் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரமேஷ்குமார், தமிழ்த்துறை தலைவர் தமிழ்செல்வி உள்பட250 க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.

Similar News