பள்ளிபாளையத்தில் தீவிர கண்காணிப்பு..!
பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு காவல் கோட்ட அதிகாரி கண்காணிப்பு;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல் அதிகாரி செல்வம் மேற்பார்வையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளான இன்று அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியும், தேவையின்றி ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்த மூர்த்தி உடனிருந்தார்