குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமானப் பணிகள் தீவிரம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-27 11:00 GMT

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டுமான பணிகள்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கூடுதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தனிப்பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பின் பொதுமக்களின் அவசர சிகிச்சைக்கு இந்த பிரிவுகள் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News