குமாரபாளையத்தில் பொங்கல் பானை விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் பொங்கல் பானைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது;

Update: 2022-01-13 17:15 GMT

பொங்கல் பானையை ஆவர்த்துடன் வாங்கும் பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகையாதலால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில், விவசாய நிலங்களில் புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து நன்றி செலுத்துவது வழக்கம். சிறிய பானை முதல் பெரிய பானை வரை விற்பனை செய்யப்பட்டது. இது பற்றி பானை வியாபாரி சக்திவேல் கூறியதாவது:

பொங்கல் பானை விற்பனை என்பது தெய்வதிற்கு செய்யும் சேவையாக எண்ணி பல தலைமுறைகளாக செய்து வருகிறோம். அதிக லாபம் இல்லாமல் இறைவனுக்காக படைக்கப்படும் பொங்கல் பானை என்பதால், சலுகை விலையில் விற்று வருகிறோம்.

50 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை பானைகள் கிடைக்கும். இதில் வண்ணம் தீட்டபட்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பானைகளும் உண்டு. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்பதால் பெரும்பாலானோர் பொங்கல் வைப்பதை தவறாமல் செய்து வருகிறார்கள். சூரியனுக்கு வருடத்தில் இந்த ஒரு நாளில் மட்டும்தான் நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News