சேலம்-கோவை புறவழிச்சாலையில் புதர்களை அகற்றும் பணி தீவிரம்
சேலம்- கோவை புறவழிச்சாலையில் சாலையோர புதர்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
சேலம் கோவை புறவழிச்சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் புதர்களை அகற்றினர்.
குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக மழை பெய்ததால் சேலம் கோவை புறவழிச்சாலையில் சாலையோரங்களில் புதர்கள் அதிகம் வளர்ந்தன. இதனால் டூவீலர்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளின் உத்திரவின் பேரில் புதர்களை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர். கத்தேரி பிரிவு, வட்டமலை, எதிர்மேடு, டீச்சர்ஸ் காலனி, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணி நடைபெற்றது.