குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த செயற்பொறியாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீடு படி மின் கட்டணம் செலுத்த செயற்பொறியாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் வௌியிட்டுள்ள அறிக்கையில், குமாரபாளையம், தெற்கு குமாரபாளையம் பிரிவு அலுவலகத்தில் நவம்பர் மாத கணக்கீட்டுப் பணி செய்ய இயலாத காரணத்தினால், அரசு கல்வியியல் கல்லூரி பகுதியில் 530 இணைப்புகள், பஜார் தெரு 300 இணைப்புகள், ஆகிய பகிர்மானங்களில் உள்ள மின் இணைப்புகளின் மின் நுகர்வோர்கள் முந்தைய மாத கணக்கீடு தொகையை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளாரற்.