குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டி.வி., நாற்காலிகளை வழங்கிய இன்ஸ்பெக்டர்
குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டி.வி., நாற்காலிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கினார்.
குமாரபாளையம் அருகே அன்னை ஆதரவற்றோர் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த மையத்திற்கு 25 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி., 10 பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆகியவற்றை மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் முதியவர்களிடம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழங்கினார்.
இவருக்கு முதியவர்கள் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். பொதுநல ஆர்வலர்கள் பாண்டியன், விடியல் பிரகாஷ், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம் முன்னாள் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் செல்லவேல், நிலதரகர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.