நீரேற்று நிலையத்தில் குமாரபாளையம் நகராட்சித்தலைவர் ஆய்வு
குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்;
குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்
நீரேற்று நிலையத்தில் குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் சேர்மன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் காவேரி நகரில் உள்ள நீரேற்று நிலையத்தில் சில ஆண்டுகளாக பராமரிப்பு செய்யபடாமல் இருந்தது. சேர்மன் விஜய்கண்ணன் முயற்சியால் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். நீரேற்றும் மோட்டார் இயங்கும் நேரம், குடிநீர் வினியோகம் செய்யும் முறை உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், கிருஷ்ணவேணி, ஜேம்ஸ், குடிநீர் பிரிவு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.