குமாரபாளையத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது.;

Update: 2024-04-03 16:15 GMT

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது.

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏப்.7ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 69 ஓட்டுச்சாவடி மையங்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது.

இதில் நகராட்சி பணியாளர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் என பலதரப்பட்டவர்கள் வழங்கினர்.


 

Similar News