போதையில் டூவீலர் ஓட்டிய இருவர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி

குமாரபாளையத்தில் குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிய வரை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்வதாக கூறியதால், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி, செல்பி எடுத்தவரை கண்டித்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.;

Update: 2025-05-13 14:03 GMT

  போதையில் டூவீலர் ஓட்டிய இருவர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி

குமாரபாளையத்தில் குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிய வரை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்வதாக கூறியதால், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி, செல்பி எடுத்தவரை கண்டித்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் இருந்து, எடப்பாடி சாலைக்கு செல்ல போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பிரிவில், ஒருவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வரும் பொழுது, எதிரே குடிபோதையில் இருவர் வந்த ஒரு இரண்டு சக்கர வாகனம் மோதியதில், நிலை தடுமாறி விழுந்தனர். போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்ததால், போலீசார் விரைந்து வந்து கீழே விழுந்தவர்களை ஓரமாக நிற்க வைத்து விசாரணை மேற்கொண்ட போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் குடிபோதையில் இருந்து தெரிகிறது. அவர்களிடம் பெயரைக் குறித்து கேட்ட பொழுது சொல்ல மறுத்ததுடன் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவர்கள் வந்த இரண்டு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வைத்தனர். இதனால் குடிபோதையில் இருந்து இருவரும் அருகில் இருந்த கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் ஒன்றும், சாணி பவுடரையும் வாங்கி வந்து, போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று கொண்டு, வாகனத்தை கொடுக்க வில்லை என்றால் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி, வாயில் சாணி பவுடரை போட்டு தண்ணீரை குடித்தனர். அதனை அவர்களே செல்பி எடுத்து தாங்கள் தற்கொலைக்கு காவல் துறைதான் காரணம் என பதிவு செய்தனர். இதனை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையத்தில் குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிய வரை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்வதாக கூறியதால், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினர்.

Similar News