குமாரபாளையத்தில் தி.மு.க.வில் இணைந்தார் சுயேச்சை கவுன்சிலர் தீபா
குமாரபாளையத்தில் சுயேச்சை கவுன்சிலர் தீபா, தி.மு.க.வில் இணைந்தார்.;
குமாரபாளையம், விட்டலபுரி பகுதி, 14வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு, தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளரை விட அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றவர் தீபா. இவர், தி.மு.க நகர பொறுப்புக்குழு தலைவரும், மூத்த நிர்வாகியுமான மாணிக்கம், அவரது துணைவியார் முன்னாள் நகரமன்ற தலைவர் சுயம்பிரபா முன்னிலையில் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்து வாழ்த்தினர். தீபாவின் தந்தை, காய்கறி மார்க்கெட் வியாபாரி விஸ்வநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.