குமாரபாளையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் 75வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஐஎம்ஆர் பொதுநல அமைப்பின் சார்பில் ஆத்மா மயான பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிசனர் ஸ்டான்லிபாபு, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாதன், குமாரபாளையம் காவேரி உயர் தொழில் நுட்ப நெசவு பூங்காவில் தலைவர் முத்துக்குமார், அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வெற்றிவேல், அதே பகுதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணன், சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, இந்தியா சிமெண்ட் ஆலையில் துணை தலைவர் வீரபாகு, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குணசேகரன், மேற்கு காலனி நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியை கவுசல்யா மணி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
நகராட்சி அலுவலகத்தில் ஐ.எம்.ஆர்.பொதுநல அமைப்பின் சார்பில் 380 தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அருவங்காடு அரசு உஅய்ர்நிலைப்பள்ளியில் கல்லங்காட்டு வலசு ஆரம்ப சுகாதார டாக்டர் செந்தாமரை மற்றும் குழுவினர்களுக்கு மரியாதையை செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.