குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் ஆதரவற்றோர் கூட்டம்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் ஆதரவற்றோர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Update: 2021-09-30 14:00 GMT

 குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் கூட்டம்.

பல ஊர்களில் இருந்து வயதானவர்கள், நோய்வாய் பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களை குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் ஆதரவற்றவர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இவர்களில் பல பேர் நடக்க கூட முடியாதவர்களாக உள்ளதால், சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை இருக்கும் இடத்திலேயே கழித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பசியாலும், கவனிக்க யாரும் இல்லாத மன உளைச்சலாலும், நோய்க்கு போதிய சிகிச்சை பெற முடியாததாலும் வாரம் இரண்டு அல்லது மூன்று நபர்கள் உயிரழக்கும் நிலை இருந்து வருகிறது.

சமீபத்தில் சைக்கிள் ஸ்டாண்டில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம், அவரது மன உளைச்சலே என்று கூறப்படுகிறது. இங்கு இருக்கும் ஆதரவற்றவர்களை காப்பகத்தில் சேர்த்து, பேருந்து நிலைய வளாகத்தில் யாரும் தங்காத அளவிற்கு மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News