குமாரபாளையத்தில் டிச. 17ல் வருமானவரி TDS குறித்த பயிலரங்கம்
குமாரபாளையத்தில், வருமானவரி TDS குறித்த இலவச பயிலரங்கம், டிச. 17ஆம் நடைபெறவுள்ளது.;
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட வரி பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், குமாரபாளையம் ரோட்டரி சங்க மண்டபத்தில், டிச. 17ல், காலை 10.30 முதல், 12.30 வரை, வருமான வரி TDS பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம். வரி செலுத்துதல் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கு, இப்பயிலரங்கில் விளக்கம் அளிக்கப்படும். இதில் வணிக பெருமக்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று, வரி பயிற்சியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.