புத்தக திருவிழா துவக்கம் - ஏ.டி.எஸ்.பி. பங்கேற்பு
குமாரபாளையத்தில் புத்தக திருவிழா துவக்கப்பட்டது.
புத்தக திருவிழா துவக்கம் ஏ.டி.எஸ்.பி. பங்கேற்பு - குமாரபாளையத்தில் புத்தக திருவிழா துவக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக திருவிழா துவக்கப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சண்முகம் பங்கேற்று, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். எஸ் எஸ் எம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரவீந்திரன், ஜீரோ வேல்யூம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜாராம், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வேலுமணி, சூர்யா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் மகாலட்சுமி கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பரிசாக சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்களது ஆயிரக்கணக்கான பதிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள்
இதில் ஜமுனா,தீனா, சண்முக சுந்தரம்,சித்ரா, ராணி, மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி சிறுகதைகள் போட்டி நாடகப் போட்டி நடத்தப்பட்டு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த அரிய சந்தர்ப்பத்தை குமாரபாளையம் வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவியர் மற்றும் புத்தக ஆர்வலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் விடியல் ஆரம்பம் சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.
.குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த புத்தக திருவிழாவில் பேச்சுப் போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்கு ஏ.டி.எஸ்.பி. சண்முகம் பரிசு வழங்கினார்.