அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா மற்றும் புத்தாக்க பயிற்சி முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வப் ரேணுகா பேசியதாவது: இந்த கல்லூரியில் உங்களுக்கு தேவையான கல்வி சம்பந்தமான அனைத்து உதவிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். பாட இணை செயல்பாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மாணவ, மாணவியர் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் காண முடியும். உயர்கல்வி பயில மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான அரசு கல்வி உதவி தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என்றார் . இதில் பேராசிரியைகள் சரவணாதேவி, கலாவதி, கீர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.