குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் தாய்- மகன் படுகாயம்
Road Accident News - குமாரபாளையத்தில் டூவீலர், கார் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.;
Road Accident News - குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத்(வயது 22.) எலெக்ட்ரிசியன். இவர் தனது ஹோண்டா டூவீலரில் தன் தாயார் ஜோதிமணி,(வயது56, )என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சேலம் -கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவை பக்கமிருந்து வந்த ஹோண்டா சிட்டி கார், இவர்கள் வந்த டூவீலர் மீது வேகமாக மோத, இருவரும் பலத்த காயமடைந்தனர். தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் ஓட்டுனர், கோவையை சேர்ந்த பொன்ராஜ்,( 56, )என்ற விவசாயியை கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2