குமாரபாளையத்தில் அனைத்து கட்சி, பொதுநல அமைப்பினர் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் அனைத்து கட்சியினர், அனைத்து பொதுநல அமைப்பினர் சார்பில் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு மாரடைப்பு சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்த பட்டியலை தலைமை டாக்டர் பாரதி, குழுவினரிடம் வழங்கினார்.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இனி குமாரபாளையத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காமல் எந்த உயிரும் போகக்கூடாது என்ற கோரிக்கை அன்று நடந்த அஞ்சலி கூட்டத்தில் எழுந்தது.
இதையடுத்து அனைத்துக்கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாரடைப்பால் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க என்னென்ன மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு தேவை என்று அறிந்து, அதனை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்து தலைமை டாக்டர் பாரதியிடம் பட்டியல் கேட்கப்பட்டது. இந்த பட்டியலை பெற்று, மருத்துவ உதவிகளை இலவசமாக செய்து தரும் பவானி டாக்டர் நடராஜனிடம் கொடுக்கப்பட்டது. அவரும் தன்னால் முடிந்த உபகரணங்களை கொடுப்பதாகவும், இதர உபகரணங்களை அரசிடம் கேட்டு பெற முயற்சி செய்யலாம் என தெரிவித்தார்.
அதன்படி ஆலோசனைக் குழுவினர், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சர் ஆகியோரிடம் இதுகுறித்து பேசி மருத்துவ உபகரணங்களை பெறலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை மக்கள் நீதி மய்ய மகளிரணி செயலர் சித்ரா, தி.மு.க. நிர்வாகி ரவி ஏற்பாடு செய்தனர்.
இதில் மக்கள் நீதி மய்ய மகளிரணி நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, அ. தி.மு.க. சார்பில் சிங்காரவேல், தி.மு.க. சார்பில் ரவி, காங்கிரஸ் சார்பில் ஜானகிராமன், தே.மு.தி.க. சார்பில் மகாலிங்கம், ம.தி.மு.க. சார்பில் விஸ்வநாதன், பா.ஜ.க. சுகுமார், திராவிடர் விடுதலை கழகம் சாமிநாதன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம், இலக்கிய தளம் அன்பழகன், மொழிப்போர் தியாகிகள் அமைப்பு குழு பகலவன், விடியல் ஆரம்பம் பிரகாஸ், அட்சயம் அறக்கட்டளை நவீன்குமார், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், ஓவியர் சங்கம் குணா, கதிரவன், ஜல்லிக்கட்டு பேரவை வினோத்குமார், சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பிரபாகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்ரமணி, நாட்டுபுற கலைக்குழு பாடகர் சமர்ப்பா குமரன், அறிவொளி தாமரை செல்வன், மனித உரிமை கழகம் கோபிராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.