குமாரபாளையத்தில் கட்டுரை,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Painting Competition- குமாரபாளையத்தில் நடந்த சுதந்திர தின பேச்சு, கட்டுரை, ஓவியபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2022-08-09 01:30 GMT

Painting Competition- குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் சுதந்திர தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றன. போட்டிகளை ஆலோசகர் லட்சுமணன், பொருளாளர் வரதராஜன், பொதுமறைமன்ற தலைவர் கணேசன், தேசிய நன்நீரோடை அமைப்பின் நிர்வாகி கவியரசன், பள்ளி தலைமையாசிரியர் கற்பகம் ஆகியோர்   துவக்கி வைத்தனர். நகரில் உள்ள 11 பள்ளிகளை சேர்ந்த 153 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நான் விரும்பும் நகராட்சி என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, என் எண்ணம் என் வண்ணம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அறிவொளி சரவணன் நினைவாக அறிவொளி விருது மற்றும் சான்றிதழ்களை இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. நகர செயலாளர் செல்வம்  ஆகியோர் பரிசு வழங்கினர். சரண்யா பிரபு, தினேஸ், பழனிச்சாமி, மாணிக்கவேல், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News