குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி 15, பாமக 3, மதிமுக 1 வேட்புமனு தாக்கல்

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி 15, பா.ம.க. 3, ம.தி.மு.க. 1 வேட்புமனு தாக்கல் செய்தனர்.;

Update: 2022-02-05 00:35 GMT

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி 15, பா.ம.க. 3, ம.தி.மு.க. 1 வேட்புமனு தாக்கல் செய்தனர்.

குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அதன் தலைமை கழகம் அறிவித்தது. ஜெயபாலாஜி, அலமேலு, பிரபாகரன், சசிகுமார், சத்தியமூர்த்தி, அலமேலு, சத்தியமூர்த்தி, பூபாலன், கார்த்திகன், கவிதா கதிர்வேல், கவிதா கதிர்வேல், அசோகன் துரையன், இளவரசன், மாணிக்கவேல், சங்கர்கணேஷ் ஆகிய வேட்பாளர்கள் வார்டுகள் முறையே 3,4,6,11,12,14,24,25,26,27,28,29,30,32,33 ஆகிய வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அலமேலு, சத்தியமூர்த்தி, கவிதா கதிர்வேல், மூவரும் தலா இரண்டு வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

பா.ம.க. சார்பில் தலைமை கழகம் அறிவித்த பட்டியல்படி ஆனந்த், குமார், சிவகுமார் ஆகிய வேட்பாளர்கள் வார்டுகள் 24,25,26 ஆகிய மூன்று வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ம.தி.மு.க. சார்பில் 30வது வார்டில் நகர செயலர் நீலகண்டன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

Similar News