குமாரபாளையத்தில் மாற்று கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைவு
குமாரபாளையத்தில் மாற்று கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.;
குமாரபாளையத்தில் மாற்று கட்சியில் இருந்து நகர பொறுப்பாளர் செல்வம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் பல கட்சியில் இருந்து பலரும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பல அரசியல் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க. வில் இணையும் நிகழ்வு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
காவேரிநகர் குமார், மகேந்திரன், பாரதி நகர் தங்கவேல் உள்ளிட்ட நபர்கள் நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலர்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, ஆகியோருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்த நபர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள் அன்பழகன், ஓ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், அன்பரசு, வெங்கடேஸ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.